என் மலர்

  சினிமா

  சுந்தர்.சி நடிக்கும் திகில் படம் இருட்டு
  X

  சுந்தர்.சி நடிக்கும் திகில் படம் இருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வி.சி.துரை இயக்கத்தில் சுந்தர்.சி - சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் திகில் படத்திற்கு `இருட்டு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #Iruttu #SundarC
  ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிப்பில் வி.சி.துரை இயக்கத்தில் உருவாகி வரும் திகில் திரைப்படம் `இருட்டு'. இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது.

  திகில் கலந்த காமெடி படமான `அரண்மனையின்' படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் சுந்தர்.சி உடன் முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.

  படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, `இது புதுமையான ஹாரர் படமாக இருக்கும். பேயே இல்லாத ஹாரர் படம் இது. எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன்' என்றார்.   படத்தின் 85% படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் சில காட்சிகள் ஐதராபாத் மற்றும் சூரத்தில் படமாக்கப்பட இருக்கிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பை கவனிக்கிறார். #Iruttu #SundarC #SaiDhansika

  Next Story
  ×