என் மலர்

  சினிமா

  அடுத்த சுற்றுக்கு தயாரான ஹன்சிகா
  X

  அடுத்த சுற்றுக்கு தயாரான ஹன்சிகா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக ஒரு சுற்று வலம் வந்த ஹன்சிகா தனது அடுத்த சுற்றுக்கு தயாராகி விட்டார். தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். #Hansika
  ஹன்சிகா மஹா படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்து வருகிறார். விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று ஒரு சுற்று வந்தவர், இனி தனி ஹீரோயினாக அடுத்த சுற்றுக்கு தயாராகி விட்டார்.

  மேலும் விக்ரம் பிரபு ஜோடியாக துப்பாக்கி முனை படத்திலும், அதர்வா ஜோடியாக 100 படத்திலும் நடித்து வருகிறார். 

  ஏன் எப்போதும் முன்னணி வேடங்களில் நடிக்கிறீர்கள்... அழுக்கான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இல்லையா? என்று கேட்டதற்கு ‘நான் நடிக்கும் கதாபாத்திரங்களை சின்னப் பசங்கள்ல இருந்து பெரியவங்க வரை எல்லாரும் ரசிக்கணும்னு விருப்பப்படுறேன். அழுக்கான கதாபாத்திரம் எனக்கு ஒத்து வராது.  தயாரிப்பாளர்களுக்கும் போட்ட காசு திரும்பக் கிடைக்கணும். அதனால அழகான கதாபாத்திரங்களை மட்டும் ஏற்று நடிக்கிறது தான் நல்லது. தயாரிப்பாளர் பணத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இப்ப வரை நான் ஒரு அழகான கதாநாயகி தான். இனிமேலும், அப்படித்தான்’ என்று கூறி இருக்கிறார். #Hansika

  Next Story
  ×