என் மலர்
சினிமா

தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நடிகர் விஜய்க்கு, நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் வாழ்த்து கூறியுள்ளார். #Mersal #Vijay #BestinternationalActorVijay
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது.
விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் விஜய்க்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் வாழ்த்து கூறியிருக்கிறார்.
சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக "சிறந்த சர்வதேச நடிகர்" என்ற விருதை வென்ற நடிகர் விஜய் @actorvijay அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். (1/2) pic.twitter.com/uIMXFUmlSa
— Vijayakant (@iVijayakant) September 23, 2018
தனது சமூக வலைத்தளத்தில், ‘சர்வதேச சாதனையாளர் அங்கீகார விருதுகள் (IARA) என்ற அமைப்பின் சார்பில், மெர்சல் படத்துக்காக "சிறந்த சர்வதேச நடிகர்" என்ற விருதை வென்ற நடிகர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பல விருதுகள் பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார். #Mersal #Vijay
Next Story