search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    2.0 கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு கெடு விதித்த சங்கர்
    X

    2.0 கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு கெடு விதித்த சங்கர்

    ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு இயக்குநர் ஷங்கர் கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth
    ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் 2.0. ரஜினி - சங்கர் கூட்டணியில் வெளியான எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இந்த படம் கடந்த ஆண்டே வெளியாக வேண்டியது. ஆனால் கிராபிக்ஸ் நிறுவனங்களால் தாமதம் ஆனது.

    பல நிறுவனங்களிடம் கிராபிக்ஸ் பணிகள் கைமாறி தற்போது வேறு ஒரு நிறுவனத்திடம் கிராபிக்ஸ் பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 29-ம் தேதி படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை எப்படியும் தள்ளிப்போடாமல் படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்று சங்கர் உறுதியாக இருக்கிறார்.

    75 மில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே செலவிடப்பட்டது. இந்தியாவிலேயே இதுவரைக்கும் எந்தப் படத்துக்கும் இந்த அளவு செலவிடப்படவில்லை. உலக அரங்கில் இந்திய சினிமாவை எடுத்துச் சென்ற ‘பாகுபலி’யைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக கிராபிக்ஸ் பணிகளுக்காக செலவிட்டிருக்கிறார்கள்.



    3 ஆயிரம் பேர் இந்த கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாகவும் ‌ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு புதிய உத்தரவு ஒன்றை சங்கர் பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 14-ம் தேதிக்குள் அனைத்து கிராபிக்ஸ் பணிகளையும் முடித்துத் தர வேண்டும் என்பதுதான் அது. கிராபிக்ஸ் பணி முடிந்த பிறகுதான் பின்னணி இசை அமைக்க இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பின்னணி இசைக்கு குறைந்தது ஒரு மாதமாவது தனக்கு வேண்டும் எனக் கேட்டிருக்கிறாராம் ஏ.ஆர்.ரகுமான். #2Point0 #Rajinikanth

    Next Story
    ×