என் மலர்

  சினிமா

  ரஜினி படத்தில் மலையாள நடிகர்
  X

  ரஜினி படத்தில் மலையாள நடிகர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் பிரபல மலையாள நடிகர் நடித்து வருகிறார். #Rajini #Petta #KarthikSubbaraj
  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘பேட்ட’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் என பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களம் இறக்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

  மேலும் மலையாளத்தில் இருந்து மணிகண்ட ஆச்சாரி என்பவரை இந்தப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க அழைத்து வந்துள்ளார் இயக்குநர். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் 2016-ம் ஆண்டு வித்தியாசமான கதையம்சத்துடன் வெளியாகிப் பாராட்டு பெற்ற படம் கம்மட்டிப்பாடம்.  இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இந்த மணிகண்ட ஆச்சாரி. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கத்தில் உருவான இப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
  Next Story
  ×