search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கடன் தொல்லையால் காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுக்கும் இயக்குனர்
    X

    கடன் தொல்லையால் காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுக்கும் இயக்குனர்

    பூந்தோட்ட காவல்காரன், பாலைவன ரோஜாக்கள் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் காஞ்சிபுரம் கோவிலில் பிச்சையெடுத்து வருகிறார்.
    எம்.ஜி.ஆர் நடித்த நம் நாடு படத்தின் இயக்குனரான ஜம்புலிங்கத்தின் மகன் செந்தில்நாதன். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனரானார்.

    விஜயகாந்த், ராதிகாவை வைத்து பூந்தோட்ட காவல்காரன் படம் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் பாலைவன ரோஜாக்கள், இளவரசன் உள்பட 20 படங்களை இயக்கினார்.

    2009-ம் ஆண்டு உன்னை நான் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். இதனால் கடன் நெருக்கடிக்கு ஆளானார். படமும் வெளியாகவில்லை. கடன் நெருக்கடியால் சினிமாவை விட்டுவிட்டு டிவி பக்கம் வந்தார்.

    டிவியில் தொடர்களை இயக்கியும் நடித்தும் வந்தார். அவர் நடித்து வந்த தொடர் ஒன்றில் இருந்து அவர் சமீபத்தில் நீக்கப்பட்டார். இதனால் கடும் விரக்தியில் இருந்தார்.

    சில நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலில் பிச்சை எடுக்க தொடங்கினார்.

    தயாரிப்பாளர்களாக இருக்கும் அவருடைய நண்பர்கள் சிலருக்கு இந்த தகவல் தெரியவரவே அவருக்கு தொடர்புகொண்டு விசாரித்தனர். அப்போது தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக கூறி இருக்கிறார்.

    செந்தில் நாதனை மீட்டு பண உதவி செய்ய தயாரிப்பாளர்கள் சிலர் கார்களில் காஞ்சிபுரம் விரைந்தனர், இயக்குனர் செந்தில் நாதன் விபரீத முடிவு எதையும் எடுப்பதற்கு முன்பாக மீட்பதற்கு காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. காவல்துறை உதவியுடன் சினிமா தயாரிப்பாளர்கள் அவரை தேடிவருகிறார்கள்.

    சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் கடந்த ஆண்டு கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது செந்தில் நாதன் அந்த விபரீத முடிவை தேட முயற்சிப்பது வேதனையளிப்பதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×