என் மலர்

  சினிமா

  நான் சினிமாவில் வருவதற்கு மிக முக்கிய காரணம் அவர்தான் - பேட்ட பற்றி கார்த்திக் சுப்புராஜ்
  X

  நான் சினிமாவில் வருவதற்கு மிக முக்கிய காரணம் அவர்தான் - பேட்ட பற்றி கார்த்திக் சுப்புராஜ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஜினியை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், நான் சினிமாவில் வருவதற்கு மிக முக்கிய காரணம் அவர்தான் என்று கூறியிருக்கிறார். #Petta #KarthikSubbaraj #Rajini
  ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் லக்னோ சென்றுள்ளார்.

  இந்த நிலையில், ‘பேட்ட’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியானது. மிகவும் கலர்புல்லாக வெளியான இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

  யூடியூப்பில் வெளியிட்ட அரை மணி நேரத்தில் 2 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்தும், 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்தும் உள்ளனர். மேலும் ட்விட்டர் பக்கத்தில் உலகளவில் டிரெண்டிங்கில் இடம் பிடித்தது.   இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்த நாள் என் வாழ்க்கையில் முக்கியமான நாள். நான் சின்ன வயதில் இருந்து ரஜினியின் விசிறி. அவரைப் பார்த்துதான் வளர்ந்தேன். நான் சினிமாவில் வருவதற்கு மிக முக்கிய காரணம் ரஜினிதான். அவரை வைத்து இயக்குவது என்னுடைய கனவு. அது நிறைவேறி இருக்கிறது. இதன் படப்பிடிப்பு சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. தன்னுடைய ஸ்டைலில் கலக்கி வருகிறார். பேட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் பார்க்கும் போது ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். சீக்கிரமே படத்தை முடித்து, சீக்கிரமே தியேட்டருக்கு வருகிறோம். ரசிகர்கள் அனைவரும் ரஜினி படத்தை கொண்டாடுவோம்’ என்றார். #Rajinikanth165 #Rajinikanth #Petta
  Next Story
  ×