என் மலர்

  சினிமா

  அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
  X

  அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது. #SuperDeluxe #VijaySethupathi
  விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்' என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ‘ஆரண்ய காண்டம்’ இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடிக்கிறார். மேலும் விஜய்சேதுபதியுடன் பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

  இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். டப்பிங் பணிகளை தொடர்ந்து தற்போது கலர் டோன் ஒர்க் பணிகள் நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

  தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.   பி.எஸ்.வினோத், நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கின்றனர். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SuperDeluxe #VijaySethupathi
  Next Story
  ×