என் மலர்

  சினிமா

  சிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  X

  சிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செக்கச்சிவந்த வானம், மாநாடு படத்தை அடுத்து சிம்பு நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்குவது யார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #STR #Simbu
  சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்புவுடன், அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

  இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

  இதையடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்று பல செய்திகள் வந்தது. இதையடுத்து சிம்பு அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.  திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் - சமந்தா - பிரணிதா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `அட்டரின்டிகி தரேதி' என்ற படத்தின் ரீமேக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது.
  Next Story
  ×