என் மலர்

  சினிமா

  2 படங்களிலும் ஒரே நேரத்தில் கலக்கும் நயன்தாரா
  X

  2 படங்களிலும் ஒரே நேரத்தில் கலக்கும் நயன்தாரா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். #Nayanthara
  தென் இந்திய நடிகைகளிலேயே மிகவும் பிசியாக வலம் வருபவர் நயன்தாரா. ஒரு பக்கம் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் இன்னொரு பக்கம் பிரதான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிக்க இருக்கும் பேய் படத்துக்கான செட் வேலைகள் சென்னையில் சென்றுகொண்டிருக்க இப்போது சிரஞ்சீவியுடன் ஐதாராபாத் பிலிம் சிட்டியில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். 

  இதே இடத்தில் தான் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பும் சென்றுகொண்டிருக்கிறது. இது நயன்தாராவுக்கு வசதியாக போய்விட்டது. இரண்டு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார். அவரது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்து இளம் நடிகைகள் வியக்கின்றனர்.   நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 
  Next Story
  ×