என் மலர்

  சினிமா

  கமலின் இந்தியன்-2 மூலம் தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் நட்சத்திரம்
  X

  கமலின் இந்தியன்-2 மூலம் தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் நட்சத்திரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாக இருக்கும் ‘இந்தியன்-2’ படக்குழுவில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நயன்தாரா இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #Indian2 #KamalHaasan
  கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2' வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. படத்தின் டிரைலர் மற்றும் மூன்று பாடல்களின் பாடல் வரி அடங்கிய வீடியோக்கள் ஏற்கனவே வெளியான நிலையில், அதன் சண்டைக் காட்சிகள் உருவான விதத்தை வீடியோவாக நேற்று வெளியிட்டனர். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

  அடுத்ததாக கமல், சங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2' படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன் தாராவும் வில்லனாக இந்தி நடிகர் அஜய்தேவ்கனும் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது.

  நயன்தாரா தென்இந்திய கதாநாயகர்களில் கமல்ஹாசனை தவிர மற்றவர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவர் இதற்கு சம்மதிப்பார் என்கிறார்கள். சமீபகாலமாக இந்தி நடிகர்களை தமிழில் முன்னணி கதாநாயகர்கள் தங்கள் படங்களில் வில்லனாக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் கமலும் அஜய்தேவ்கனை வில்லனாக்குகிறார்.  லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. 1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன்-2 உருவாக இருக்கிறது. படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #Indian2 #KamalHaasan

  Next Story
  ×