என் மலர்

  சினிமா

  காதலருடன் செல்லும் போது வீடியோ எடுத்த ரசிகையை தாக்கிய தீபிகா படுகோனே
  X

  காதலருடன் செல்லும் போது வீடியோ எடுத்த ரசிகையை தாக்கிய தீபிகா படுகோனே

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தி நடிகர் ரன்வீர்சிங்கும் தீபிகா படுகோனேவும் வெளிநாட்டில் ஊர் சுற்றி வருவதை வீடியோ எடுத்த ரசிகையை தீபிகா தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #DeepikaPadukone
  இந்தி நடிகர் ரன்வீர்சிங்கும் தீபிகா படுகோனேவும் நீண்ட நாட்களாக காதலிக்கின்றனர். இருவரும் ஜோடியாக சுற்றுகிறார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கும் சேர்ந்து வருகிறார்கள். இருவரும் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த பத்மாவத் படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது.

  இந்த படத்துக்கு பிறகு மேலும் நெருக்கமானார்கள். இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்றும் நவம்பர் 19–ந்தேதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் தகவல் கசிந்துள்ளது. இந்த நிலையில் தீபிகா படுகோனேவும் ரன்வீர்சிங்கும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அங்கு யாரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க மேக்கப் போடாமல் சுற்றி வந்தனர்.

  புளோரிடாவில் உள்ள டிஸ்னிலெண்டுக்கும் சென்று சுற்றி பார்த்தனர். அங்கு வந்திருந்த இந்தியர்கள் யாருக்கும் அவர்களை அடையாளம் தெரியவில்லை. இதனால் சுதந்திரமாக நடமாடினார்கள். ஆனால் ஜனாப் என்ற இந்திய பெண் மட்டும் கண்டுபிடித்து விட்டார். அவர்கள் முன்னால் சென்று வீடியோ எடுத்தார்.  இதை எதிர்பார்க்காத தீபிகா படுகோனே அதிர்ச்சி அடைந்தார். கோபத்தோடு அந்த பெண் அருகில் சென்று அவரை தாக்கி வீடியோவை பறித்து படங்களை அழித்து விட்டு சென்றார். இந்த தகவலை ஜனாப் டுவிட்டரில் வெளியிட்டு, ‘‘தீபிகா படுகோனேயை வீடியோ எடுத்தற்காக அவர் என்னை தாக்கினார். அவமரியாதையாக நடந்து கொண்டார்’’ என்று கூறியுள்ளார். இதனால் தீபிகா படுகோனேவை சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகின்றனர்.
  Next Story
  ×