என் மலர்

  சினிமா

  திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சமந்தா
  X

  திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சமந்தா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் சமந்தா, சீமராஜா வெளியீட்டை அடுத்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். #Samantha
  தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் விஜய்யுடன் மட்டும் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

  இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவர் நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.   தற்போது இவர் நடிப்பில் ‘சீமராஜா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய தோழிகளுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். இவரை பார்த்த ரசிகர்கள் அவருடன் போட்டோ எடுக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
  Next Story
  ×