என் மலர்

  சினிமா

  சண்டைப்பயிற்சியில் தீவிரம் காட்டும் நிவேதா பெத்துராஜ்
  X

  சண்டைப்பயிற்சியில் தீவிரம் காட்டும் நிவேதா பெத்துராஜ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், தீவிரமாக சண்டைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். #NivethaPethuraj
  நிவேதா பெத்துராஜ் கடைசியாக ஜெம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், நிவேதா தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும், விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு பிடிச்சவன் படத்திலும், பிரபுதேவா ஜோடியாக பொன் மாணிக்கவேல் படத்திலும் நடித்து வருகிறார். 

  ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா உதவி கமி‌ஷனர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நிவேதாவுக்கும் போலீஸ் வேடம் என்று கூறப்படுகிறது. அவருக்கும் சண்டைக்காட்சிகள் உண்டு என்பதால் அதற்காக சண்டைப்பயிற்சி எடுத்து வருகிறார்.



  மேலும் நிவேதா பெத்துராஜ் இதற்காக சிறப்பு வகுப்புகளுக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. #PonManickavel #Prabhudeva #NivethaPethuraj
  Next Story
  ×