என் மலர்

  சினிமா

  கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு
  X

  கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு, கருணாநிதி, மற்றும் ஓபிஎஸ் அவர்களைப் பற்றி நான் ஏந்த கருத்தும் கூறவில்லை என்று கூறியிருக்கிறார். #Yogibabu
  தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

  சமீபத்தில் இவர் நடிப்பில் ‘ஜுங்கா’, ‘மோகினி’ ஆகிய படங்கள் உருவாகி வெளியாகியுள்ளது. மேலும் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோலமாவு கோகிலா’, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் ‘லிசா’, விஜய்யுடன் ‘சர்கார்’, அஜித்துடன் ‘விசுவாசம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  தற்போது இவர் திமுக தலைவர் கருணாநிதி, அதிமுகவின் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரைப் பற்றி கருத்து தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இதையறிந்த யோகி பாபு, ‘என் பெயரில் பல போலி ட்விட்டர் கணக்குகள் உருவாகியுள்ளது. நான் கருணாநிதி, ஓபிஎஸ் அவர்களை பற்றி எந்த கருத்தும் கூறவில்லை. என்னைப் பற்றி போலியான செய்திகள் உலாவி வருகிறது. யாரும் நம்ப வேண்டாம்’ என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  Next Story
  ×