என் மலர்

  சினிமா

  அப்போ ரதி தேவி, இனிமேல் சுதந்திர தேவி
  X

  அப்போ ரதி தேவி, இனிமேல் சுதந்திர தேவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இரும்புத்திரை படத்தில் ரதி தேவியாக ரசிகர்களை கவர்ந்த சமந்தா, அடுத்ததாக சுதந்திர தேவியாக ரசிகர்களை கவர இருக்கிறார். #Samantha
  திருமணத்திற்குப் பிறகும் பல படங்கள் கைவசம் வைத்துக் கொண்டு முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘இரும்புத்திரை’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதில் சமந்தா மனநல மருத்துவர் கதாபாத்திரத்தில் ரதி தேவி என்னும் பெயரில் நடித்திருந்தார்.

  தற்போது இவரது நடிப்பில் சீமராஜா திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கிறார். இதில் சமந்தாவின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகி இருக்கிறது. இதில் சுதந்திர தேவி என்னும் கதாபத்திரத்தில் சிலம்பம் டீச்சராக நடித்திருக்கிறார். இதற்காக மூன்று மாதமாக சிலம்பம் கற்றிருக்கிறார் சமந்தா.  சீமராஜா திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் சமந்தா நடிப்பில் ‘யூடர்ன்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

  Next Story
  ×