என் மலர்

  சினிமா

  இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி
  X

  இயக்குனர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல இயக்குனர் மணிரத்னம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Maniratnam
  பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் மணிரத்னம். இவர் இறுதியாக ‘காற்று வெளியிடை’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் கார்த்தி நாயகனாகவும், அதிதி ராவ் நாயகியாகவும் நடித்திருந்திருந்தார்கள்.

  இப்படத்தை அடுத்து தற்போது ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி வந்தது. ஆனால், அது வதந்தி என்றும், சாதாரண உடல் பரிசோதனைக்காக தான் மருத்துவமனைக்கு சென்றார் என்றும் மணிரத்னம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×