என் மலர்

  சினிமா

  விக்ரமுடன் இணைந்து பாடிய கீர்த்தி சுரேஷ்
  X

  விக்ரமுடன் இணைந்து பாடிய கீர்த்தி சுரேஷ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் விக்ரமுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து பாடியிருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். #ChiyaanVikram #KeerthySuresh
  சாமி படத்தின் இரண்டாம் பாகமாக சாமி ஸ்கொயர் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஜஸ்வர்யா ராஜேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர். 

  இவ்விழாவில் படக்குழுவினர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் இடம் பெறும் ‘புது மெட்ரோ ரயில்’ என்ற பாடலை விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து பாடியிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.  ஏற்கெனவே வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. சமீபத்தில் வெளியிட்ட சிங்கள் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 
  Next Story
  ×