என் மலர்

  சினிமா

  மீண்டும் இணையும் பிரபல கூட்டணி
  X

  மீண்டும் இணையும் பிரபல கூட்டணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், யுவன் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NGK #Suriya
  சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தல் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது.

  நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்த நிலையில், நடிகர் தனுஷ் இந்த படத்தில் ஒரு பாடலை பாடவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே யுவன் இசையில் தனுஷ் பல பாடல்களை பாடியிருக்கும் நிலையில், சூர்யா நடிக்கும் படத்தில் தனுஷ் முதல்முறையாக ஒரு பாடலை பாடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது ஒரு குத்துப்பாடல் என்றும் கூறப்படுகிறது.  இந்த படத்தில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர். ஜெகபதிபாபு வில்லனாக நடிக்க, ராம்குமார் கணேசன், இளவரசு, பாலா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூலை 23-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். #NGK #Suriya

  Next Story
  ×