என் மலர்

  சினிமா

  தம்பிக்கு நெகிழ்ச்சியுடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரியங்கா சோப்ரா
  X

  தம்பிக்கு நெகிழ்ச்சியுடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரியங்கா சோப்ரா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, தன்னுடைய தம்பிக்கு நெகிழ்ச்சியுடன் பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார். #PriyankaChopra
  பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறார். இதற்காக ஹாலிவுட்டில் தங்கி இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்போது இந்தியா திரும்பியுள்ளார். இம்முறை அவர் இந்தியாவில் கூடுதல் நாட்கள் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.

  மும்பையில் தனது தம்பி சித்தார்த் சோப்ராவின் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில், ஹாய் ப்ரோ, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீ சிறந்த மனிதனாக மாறி இருக்கிறாய். உன்னை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். நீ அப்பாவை அதிகமாக நினைவுப்படுத்திகிறாய். உன்னுடைய இரக்க குணத்திற்கு நன்றி’ என்று பதிவு செய்திருக்கிறார்.  பிரியங்கா சோப்ரா தற்போது தி ஸ்கை இஸ் பிங்க் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ஆயிஷா சவுத்திரி என்னும் 13 வயது சிறுமியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கிறது. இதில் ஆயிஷாவின் அம்மாவாக பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார். ஆயிஷாவாக சைரா வாசிம் நடிக்க உள்ளார்.
  Next Story
  ×