என் மலர்

  சினிமா

  அந்தக் காட்சியில் மட்டும் நடிக்க மாட்டேன் - கீர்த்தி சுரேஷ் திட்டவட்டம்
  X

  அந்தக் காட்சியில் மட்டும் நடிக்க மாட்டேன் - கீர்த்தி சுரேஷ் திட்டவட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான கீர்த்தி சுரேஷ் முத்தக் காட்சியில் மட்டும் தன்னால் நடிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். #KeerthySuresh
  நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் தற்போது, விஜய் ஜோடியாக சர்கார், விக்ரம் ஜோடியாக சாமி ஸ்கொயர், விஷால் ஜோடியாக சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது. 

  இதுவரை கீர்த்தி தான் நடித்த படங்களில் கவர்ச்சி, முத்தம் உள்ளிட்ட காட்சிகள் எதிலும் நடித்ததில்லை. இந்த நிலையில் இனிவரும் படங்களில் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா என்று கீர்த்தியிடம் கேட்ட போது அவர் அளித்த பதில் வருமாறு,

  “நான் படங்களில் நடிக்க தொடங்கியதுமே கமர்சியல் நடிகைகளுக்கு எல்லைகள் இருக்க கூடாது, எந்த கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருக்க வேண்டும். முத்தக் காட்சிகளில் நடிக்கவும் தயங்க கூடாது என்று கூறினர். ஆனால் என்னிடம் யாராவது முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்று அணுகினால் முடியாது என்று மறுத்து விடுவேன்.   இதுவரை நான் நடித்த எந்த படத்திலும் முத்தக் காட்சி இல்லை. அதுமாதிரி காட்சிகள் இல்லாத படவாய்ப்புகளே எனக்கு வந்துள்ளன. நான் நடித்துள்ள படங்களின் டைரக்டர்கள் யாரும் முத்தக் காட்சியில் நடிக்க நிர்ப்பந்திக்கவில்லை. இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். என்னால் முத்தக் காட்சிகளில் நடிக்க முடியாது. 

  காரணம் எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. காதல் காட்சிகளில் நடிக்கவும் வெட்கப்படுவேன். கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால் நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை. தமிழில் நிறைய படங்கள் கைவசம் உள்ளன.” என்று கூறினார். #KeerthySuresh

  Next Story
  ×