search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இலங்கையில் சீமராஜா பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
    X

    இலங்கையில் சீமராஜா பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சீமராஜா’ திரைப்படத்தை இலங்கையில் வெளியிட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. #Sivakarthikeyan #Seemaraja
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

    கிராமப் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 



    24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் இப்படத்தின் வெளியிட்டு உரிமையை நாஸ் லங்கா ஹோல்டிங் பிரைவேட் லிமிடேட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. #Sivakarthikeyan #Seemaraja
    Next Story
    ×