search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
    X

    எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

    தேங்காய் எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராக நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #KajalAggarwal
    சென்னை ஐகோர்ட்டில், நடிகை காஜல் அகர்வால் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘வி.வி.டி. தேங்காய் எண்ணெய் நிறுவனம் விளம்பரத்தில் நடித்தேன். இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்த விளம்பரத்தை ஒரு ஆண்டு மட்டுமே அந்த நிறுவனம் ஒளிபரப்ப வேண்டும். ஆனால், ஒப்பந்தத்தை மீறி, ஓராண்டுக்கு மேல் ஒளிபரப்பியதால், ரூ.2.50 கோடி இழப்பீடு வழங்க எண்ணெய் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ரவீந்திரன், ‘காப்புரிமைச் சட்டத்தின்படி ஒரு விளம்பர படத்தின் உரிமையானது 60 ஆண்டுகள் வரை அந்த நிறுவனத்துக்கே சொந்தமானது. ஓராண்டு மட்டுமே அந்த விளம்பரத்தை ஒளிபரப்பு செய்யவேண்டும் என நிர்ப்பந்திக்க முடியாது. நடிப்பதற்கு சம்பளம் பெற்றுக்கொண்டு விளம்பரத்தில் நடித்து கொடுத்ததோடு நடிகை காஜல் அகர்வாலின் பங்கு முடிந்துவிட்டது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ எனக்கூறி கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.



    இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் நடிகை காஜல் அகர்வால் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்தனர்.

    எண்ணெய் நிறுவனம் சார்பில் வக்கீல் பி.வி.எஸ்.கிரிதர், காஜல் அகர்வால் சார்பில் வக்கீல் வி.மனோகர் ஆகியோர் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #KajalAggarwal 

    Next Story
    ×