என் மலர்

  சினிமா

  டி.வி. நிகழ்ச்சியில் தகராறு - இயக்குனர் அமீரை கைது செய்ய தடை
  X

  டி.வி. நிகழ்ச்சியில் தகராறு - இயக்குனர் அமீரை கைது செய்ய தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.வி. விவாத நிகழ்ச்சியில் தகராறு செய்ததாக இயக்குனர் அமீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அமீரை கைது செய்ய 25-ந்தேதி வரை தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Ameer
  கோவையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் கடந்த 8-ந்தேதி விவாத நிகழ்ச்சி நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. இதில் இயக்குனர் அமீர் பேசிய போது பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  இது தொடர்பாக இயக்குனர் அமீர் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த வாரம் அமீர் தரப்பு வக்கீல் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பு வக்கீல் ஆறுமுகம் நீதிபதி குணசேகரனிடம் கால அவகாசம் கேட்டார். இதனையடுத்து நீதிபதி குணசேகரன் விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். அதுவரை இயக்குனர் அமீரை கைது செய்யக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். #Ameer
  Next Story
  ×