என் மலர்

  சினிமா

  சிவகார்த்திகேயனுடன் இணையும் விக்னேஷ் சிவன்
  X

  சிவகார்த்திகேயனுடன் இணையும் விக்னேஷ் சிவன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தானா சேர்ந்த கூட்டத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க இருக்கிறார் விக்னேஷ் சிவன். #Sivakarthikeyan #VigneshShivan
  நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை இயக்குவதாகத்தான் இருந்தார் விக்னேஷ்சிவன். சூர்யாவை இயக்கும் வாய்ப்பு வந்ததாலும் சிவகார்த்திகேயன் பிசியாக இருந்ததாலும் அது தள்ளிப்போனது.

  சிவகார்த்திகேயன் முன்பே ஒப்புக்கொண்ட படி ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு படம் நடித்து தர முன்வந்தபோதே, இயக்குனர் விக்னேஷ் சிவனாகத் தான் இருக்ககூடும் என்று தகவல் பரவியது.



  ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக எம்.ராஜேஷ் இயக்கவிருக்கிறார். எம்.ராஜேஷை தொடர்ந்து விக்னேஷ் சிவனுடன் இணைய இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். இதனை எம்.ராஜேஷ் உறுதிபடுத்தி இருக்கிறார். ஒரு பேட்டியில் ’விக்னேஷ் சிவன் தான் பண்ற மாதிரி இருந்துச்சு. அவர் ஸ்கிரிப்ட் வொர்க் பண்ண நேரம் கேட்டு இருக்கார். அவர் சிவாவுக்குதான் ஸ்கிர்ப்ட் எழுதிட்டு இருக்கிறார். அடுத்து அவர் சிவாவுக்கு படம் பண்ணுவார் என்று நினைக்கிறேன். என் ஸ்கிரிப்ட் ரெடியா இருந்ததுனால, நான் முதல்ல படம் பண்ண வேண்டியதாகிடுச்சு’ என்று சொல்லியிருக்கிறார் எம்.ராஜேஷ்.
  Next Story
  ×