என் மலர்

  சினிமா

  சோனம் கபூருக்கு கணவர் விதித்த தடை
  X

  சோனம் கபூருக்கு கணவர் விதித்த தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பையில் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துக் கொண்ட இந்தி நடிகை சோனம் கபூருக்கு அவரது கணவர் சில தடைகளை விதித்திருக்கிறார். #SonamKapoor
  இந்தி நடிகை சோனம் கபூர் திருமணம் நேற்று மும்பையில் நடந்தது. இந்த நிலையில் கணவர் அனந்த் அஹுஜா தனக்கு விதித்த தடைபற்றி கூறியுள்ள சோனம்கபூர்,

  “ஆனந்த் எனக்கு ஒரு கட்டுப்பாடு விதித்து இருக்கிறார். படுக்கை அறைக்கு செல்போனை கொண்டு போகக் கூடாது என்பது தான் அது. அவருக்கும் இந்த தடை பொருந்தும் என்று சொல்லி இருக்கிறார்.

  தூங்குவதற்காக படுக்கை அறைக்கு சென்றால் செல்போனை வேறு ஏதாவது ஒரு அறையில் வைத்து விடுவேன். இதுவரை அப்படித்தான் செய்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி வெளியே பேசமாட்டேன்.

  சமூக வலைத்தளம் என்கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு என்ன போஸ்ட் போடவேண்டும் என்பது எனக்குத்தெரியும். என்தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களை பொது இடத்தில் சொல்ல விரும்பவில்லை. படுக்கை அறையில் செல்போனை வைக்காதீர்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னொன்று செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுகிறது. இதனால் தான் கணவர் ஆனந்த் இப்படி கட்டுப்பாடு விதித்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×