என் மலர்

  சினிமா

  காதலரை கரம்பிடித்தார் நடிகை சோனம் கபூர் - மும்பையில் கோலாகலம்
  X

  காதலரை கரம்பிடித்தார் நடிகை சோனம் கபூர் - மும்பையில் கோலாகலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை சோனம் கபூருக்கும், அவரது காதலரான ஆனந்த் அகுஜாவுக்கும் மும்பையில் வைத்து கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. #SonamKapoorWedding #SonamAnandWedding
  பிரபல இந்தி திரைப்பட நடிகை சோனம் கபூரும், டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், சோனம் கபூர் - ஆனந்த் அகுஜாவின் திருமணம் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் சீக்கிய முறைப்படி நடந்தது. 

  இவர்களது திருமணத்தை கபூர் மற்றும் அகுஜா குடும்பத்தினர் கோலாகலமாக நடத்தினர். திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் அமீர் கான், ஜாக்குலின் பெர்னான்டஸ், ஸ்வரா பாஸ்கர், ரன்வீர் சிங், கரன் ஜோஹர், ஹர்ஷவர்தன் கபூர், சயீப் அலிகான், கரீனா கபூர், ராணி முகர்ஜி, சஞ்சய் கபூர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.   தொடர்ந்து லீலா பேலஸில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. முன்னதாக நேற்று சோனம் கபூருக்கு மெகந்தி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. #SonamKapoorWedding #SonamAnandWedding 
  Next Story
  ×