என் மலர்
சினிமா

அரசியலில் களமிறங்குகிறாரா திரிஷா?
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய திரிஷா, அரசியலுக்கு வருவீர்களா? என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். #Trisha
நடிகை திரிஷா நீண்ட நாட்களுக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கலந்துரையாடினார். அவர் கூறியதாவது:
“எனது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு நான் தான் சிறந்த விமர்சகராக இருக்கிறேன். எனக்கு தன்னம்பிக்கை அதிகம். அதுதான் எனது பலமாகவும் இருக்கிறது. படப்பிடிப்பில் ஓய்வு கிடைத்தாலோ, மனதுக்கு கஷ்டமாக இருந்தாலோ நியூயார்க் சென்று விடுவேன். அது எனக்கு மிகவும் பிடித்த இடம்.
லண்டனுக்கும் அடிக்கடி செல்கிறேன். அங்கு நடைபயிற்சி செய்வேன். நிறைய சாப்பிடுவேன். எனது வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உந்துதலாக இருப்பது யார்? என்று கேட்கப்படுகிறது. அந்த சக்தி எனக்குள்தான் இருக்கிறது. உணவு, ஷாப்பிங் இரண்டிலும் சாப்பாடுதான் எனக்கு பிடிக்கும். சாப்பிடுவதற்காகவே வாழ்வதாக நினைக்கிறேன்.
தினமும் காலையில் எழுந்ததும் எனது செல்போனை நோண்டுவேன். அரசியலுக்கு வருவீர்களா? என்று என்னிடம் கேட்கப்படுகிறது. இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. சமைக்க அவ்வப்போது முயற்சி செய்து வருகிறேன். புதிய படத்தில் நடிக்க பேசி வருகிறேன். விரைவில் அறிவிப்பு வரும்.

சினிமா துறையில் என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்த துறையில் நிறைய புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஓய்வு நேரத்தில் திகில், மர்ம கதை புத்தகங்கள் படிப்பேன். எதிர்காலத்தில் டைரக்டராகும் திட்டம் இல்லை.”
இவ்வாறு திரிஷா கூறினார்.
Next Story