என் மலர்

  சினிமா

  திரிஷாவுக்கு வாழ்த்து சொன்ன ஆர்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்
  X

  திரிஷாவுக்கு வாழ்த்து சொன்ன ஆர்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்த ஆர்யாவுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Trisha #Arya
  தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக முன்னணி இடத்தில் இருப்பவர் திரிஷா. இவர் நேற்று பிறந்த நாள் கொண்டாடினார்.

  திரிஷாவுக்கு சமூகவலைதளங்களில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். திரையுலகினர் பலரும் டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் ஆர்யாவும் டுவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் மைடியர் குஞ்சுமணி. இந்த ஆண்டு வெளியாகும் உங்கள் படங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  கடந்த ஆண்டும் திரிஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் போது அவரை குஞ்சுமணி என்று தான் ஆர்யா வாழ்த்தி இருந்தார். இந்த ஆண்டும் அதே வார்த்தையை பயன்படுத்தி இருப்பதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். ஒரு நடிகையை குஞ்சுமணி என்று அழைப்பதா? உங்களுக்கு வேறு நல்ல வார்த்தையே கிடைக்கவில்லையா? பெண்களை மதிக்க தெரியாதா? என்று பல ரசிகர்கள் ஆர்யாவை இணையதளத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். #Trisha #Arya
  Next Story
  ×