என் மலர்

  சினிமா

  வைரலாகும் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ
  X

  வைரலாகும் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீப காலமாக நடிகைகள் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவு செய்வதுபோல், நடிகை ஆண்ட்ரியாவும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். #Andrea #AndreaJeremiah
  ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான ‘தரமணி’ படம், அவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. இப்படத்திற்கு விஷால் நடிப்பில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்திலும், சித்தார்த்துடன் ‘அவள்’ படத்திலும் நடித்திருந்தார். 

  தற்போது கமலுடன் இணைந்து ‘விஸ்வரூபம் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதுபோல், வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘வட சென்னை’ படத்திலும் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.  இதையடுத்து ‘கா’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாக இருக்கும் இதில் வைல்ட் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார். 125 கிலோ வெயிட்டை இழுக்கும் உடற்பயிற்சி வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஆண்ட்ரியா பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
  Next Story
  ×