என் மலர்

  சினிமா

  சுவிட்சர்லாந்தில் நடக்கும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்
  X

  சுவிட்சர்லாந்தில் நடக்கும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் ரன்வீர் சிங்குக்கும், தீபிகா படுகோனேவுக்கும் வருகிற செப்டம்பர் மாதத்தில் சுவிட்சர்லாந்தில் வைத்து திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #DeepikaPadukone #RanveerSingh
  இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்குடன் ஜோடியாக பாஜி ராவ் சமஸ்தானி படத்தில் நடித்தார். அதன்பின் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பார்ட்டிகளில் ஒன்றாக காணப்பட்டார்கள். பட விழாக்களுக்கு இருவரும் கைகோர்த்தபடி ஜோடியாக வலம் வந்தனர்.

  இதையடுத்து அவர்கள் காதலித்து வந்தது உறுதியாகியது. ஆனால் அதுபற்றி இருவரும் இன்னும் வாய் திறக்கவில்லை. அவர்கள் நடித்த பத்மாவதி படம் மிகப்பெரிய வெற்றிபெற்று வசூலை குவித்தது. இதனால் இந்த ஜோடி மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அவர்களை பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  இந்தநிலையில் தீபிகா படுகோனே ரன்வீர் சிங் ஜோடி திருமணம் இந்த ஆண்டு கடைசியில் நடைபெறுகிறது. இருவரின் பெற்றோர்களும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதத்துக்குள் நான்கு தேதிகளை தேர்வு செய்துள்ளனர்.

  இவர்களின் திருமணம் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் ரன்வீர் சிங் சுவிட்சர்லாந்து நாட்டின் இந்திய சுற்றுலா பிரதிநிதியாக உள்ளார். இதனால் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டால் திருமணம் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. #DeepikaPadukone #RanveerSingh
  Next Story
  ×