என் மலர்

  சினிமா

  காதலை புதுப்பிக்கும் ஜெய்-அஞ்சலி
  X

  காதலை புதுப்பிக்கும் ஜெய்-அஞ்சலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பலூன் படத்திற்கு பிறகு ஜெய்-அஞ்சலி பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகிய நிலையில், இருவரும் தங்களது காதலை புதுப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. #Jai #Anjali
  ஜெய் - அஞ்சலி எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்தனர். பின்னர் பலூன் படத்திலும் இணைந்து நடித்தனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் தீவிரமாக காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் செய்திகள் வந்தன.

  இதை இருவரும் மறுத்தாலும், அவர்கள் காதலிப்பது உண்மை தான் என்று சினிமா வட்டாரங்கள் உறுதி செய்தன.

  இந்த நிலையில் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்தனர். தாங்கள் நண்பர்கள் மட்டுமே. எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று கூறினார்கள்.  இருவரும் தாங்கள் நடித்து வரும் படங்களில் பிசி ஆனார்கள். இந்த நிலையில் ஜெய் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அஞ்சலி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெ. உலகில் உள்ள அனைத்து சந்தோ‌ஷங்களும் கிடைக்க வாழ்த்துக்கள் என்று கூறி உள்ளார்.

  இதன்மூலம் ஜெய் - அஞ்சலி இடையே மீண்டும் நட்பு துளிர்விட தொடங்கி இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. #Jai #Anjali
  Next Story
  ×