என் மலர்

  சினிமா

  அடுத்ததாக மலையாள படத்தில் நடிக்கும் ஜீவா
  X

  அடுத்ததாக மலையாள படத்தில் நடிக்கும் ஜீவா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `கீ', `கொரில்லா', `ஜிப்ஸி' என அடுத்தடுத்து பிசியாகி இருக்கும் ஜீவா அடுத்ததாக மலையாள படம் ஒன்றின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Jiiva
  ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான `கலகலப்பு-2' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ஜீவா நடிப்பில் `கீ' படம் அடுத்ததாக ரிலீசாக இருக்கிறது. 

  ஜீவா தற்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் `கொரில்லா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு ராஜு முருகன் இயக்கத்தில் `ஜிப்ஸி' படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், ஜீவா மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

  ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் `ஸ்வாத்தந்ரயம் அர்த்தராத்ரியில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜீவா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய தினு பாப்பச்சன் தமிழிலும் இந்த படத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.   இதுகுறித்து நடிகர் ஜீவாவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் கேட்ட போது, ஜீவா இந்த படத்தில் நடிப்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்தனர். ஜீவா இந்த படத்தில் ஒப்பந்தமாகும் பட்சத்தில் ராஜு முருகனிள் `ஜிப்ஸி' படத்தை முடித்த பிறகே ஜீவா இந்த படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. #Jiiva 

  Next Story
  ×