என் மலர்

  சினிமா

  அப்பா தான் உண்மையான ஹீரோ - ஷிவானி ராஜசேகர்
  X

  அப்பா தான் உண்மையான ஹீரோ - ஷிவானி ராஜசேகர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் நிலையில், அப்பா தான் தனது திரை உலக, உண்மையான ஹீரோ என்று கூறியிருக்கிறார். #ShivaniRajashekar
  டாக்டர் ராஜசேகர் - ஜீவிதா தம்பதியின் மூத்த மகள் ஷிவானி. மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்து வரும் இவர், இப்போது ஒரு படத்தின் நாயகி ஆகி இருக்கிறார். இது ‘2 ஸ்டேட்ஸ்’ இந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்.

  இந்த நிலையில் சினிமா பற்றி கூறிய ஷிவானி....

  “ அப்பா தான் எனக்கு முன் மாதிரி. நடிகர் ஆனபிறகும் அவர் டாக்டர் தொழிலைவிடவில்லை. அவரிடம் சிகிச்சை பெறுபவர்கள் அவரை ‘மேஜிக்மேன்’ என்று அழைப்பார்கள். எனக்கு பிடித்த 2 வி‌ஷயங்களில் ஒன்று மருத்துவம், மற்றொன்று நடிப்பு. நான் நல்ல டாக்டராகவும், அருமையான நடிகையாகவும் இருப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  ‘குடும்பம், நண்பர்கள் முன்பு நடிப்பதாக நினைத்துக்கொள். கேமரா முன்பு பயம் இல்லாமல் நன்றாக நடிக்க முடியும்’ என்று அப்பா அறிவுரை கூறி இருக்கிறார். அதை பின்பற்றுகிறேன்.  நான் குச்சுப்புடி நடனம் கற்றிருக்கிறேன். கதகளி, பெல்லி டான்ஸ் கற்று வருகிறேன். கிக்பாக்சிங் கற்கிறேன். படங்களில் பாட்டு பாடும் ஆசையும் இருக்கிறது. கர்நாடக இசையும் கற்றிருக்கிறேன்.

  அப்பா தான் எனது திரை உலக, உண்மை ஹீரோ. அம்மா மாதிரி நான் இருப்பதாக யாராவது சொன்னால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது உள்ள நடிகைகளில் சமந்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்கிறார். #ShivaniRajashekar 

  Next Story
  ×