என் மலர்

  சினிமா

  பாக்யராஜ் படத்தில் சசிகுமார்
  X

  பாக்யராஜ் படத்தில் சசிகுமார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாக்யராஜ் இயக்கி நடித்து மாபெரும் வரவேற்பை பெற்ற `தூறல் நின்னு போச்சு' படத்தின் ரீமேக்கில் நடிகர் சசிகுமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ThooralNinnuPochchu
  கடந்த 1982-ஆம் ஆண்டு வெளியாகிய படம் `தூறல் நின்னு போச்சு'. பாக்யராஜ் இயக்கி நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சுலோக்சனாவும், முக்கிய கதாபாத்திரத்தில் எம்.என்.நம்பியாரும் நடித்திருந்தனர். 

  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தின் மறுஉருவாக்கத்தில் (Remake) இயக்குநரும், நடிகருமான சசிகுமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமாரும், நம்பியார் கதாபாத்திரத்தில் ராஜ்கிரனும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.   இதுகுறித்து பாக்யராஜிடம் கேட்டபோது, தூறல் நின்னுப் போச்சு படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். சசிகுமார் கூறும்போது, அவர் இந்த படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், நம்பியார் கதாபாத்திரத்திற்கு ராஜ்கிரன் பொருத்தமாக இருப்பார் என்று நம்புகிறோம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் கூறினார். 

  சசிகுமார் தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் `நாடோடிகள்-2' படத்தில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் `அசுரவதம்' என்ற படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. #ThooralNinnuPochchu

  Next Story
  ×