என் மலர்

  சினிமா

  விஜய் சேதுபதியுடன் இரண்டாவது முறையாக இணையும் நிஹாரிகா
  X

  விஜய் சேதுபதியுடன் இரண்டாவது முறையாக இணையும் நிஹாரிகா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிஹாரிகா கொனிதலா, மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SyeraaNarasimhaReddy #NiharikaKonidela
  `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிஹாரிகா கொனிதலா. மெகா ஸ்டார் சீரஞ்சீவியின் உறவுக்கார பெண்ணான இவர், தற்போது `ஹேப்பி வெட்டிங்' என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

  இந்நிலையில், தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் `சயீரா நரசிம்ம ரெட்டி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நிஹாரிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படத்தில் சிரஞ்சீவி, அமித்தாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சுதீப், ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.   சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 

  தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரூ.150 கோடி செலவில் தயாராகும் இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரிக்கிறார். #SyeraaNarasimhaReddy #NiharikaKonidela

  Next Story
  ×