என் மலர்

  சினிமா

  இளையராஜா பாராட்டியது என்னால் மறக்க முடியாது - சத்யா
  X

  இளையராஜா பாராட்டியது என்னால் மறக்க முடியாது - சத்யா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பைரவா, மான் கராத்தே, றெக்க, எமன் படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்த சத்யா, இசையமைப்பாளர் இளையராஜா பாராட்டியது என்னால் மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
  தற்போது பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வருபவர் சத்யா. இவர் விஜய்யின் ‘பைரவா’, சிவகார்த்தியனின் ‘மான் கராத்தே’, விஜய் சேதுபதியின் ‘றெக்க’, விஜய் ஆண்டனி ‘எமன்’ உள்ளிட்ட 35 படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ளார். இவர் இளையராஜாவிற்கு கோட்சூட் போட்டவர்.

  இவர் தன்னுடைய அனுபவங்களை கூறும்போது, ‘நான் பல படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியுள்ளேன். விஜய் படத்திற்கு பிறகுதான் என்னை பலருக்கும் தெரிந்தது. நான் விஜய்யின் தீவிர ரசிகன். எந்தளவிற்கு அவரை ரசித்தேனோ, அவருடனே பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி.  நான் இளையராஜாவிற்கு இரண்டு முறை காஸ்ட்யூம் டிசைன் செய்திருக்கிறேன். முதலில் எல்லோரும் என்னை பயமுறுத்தினார்கள். ஆனால், இளையராஜா குழந்தை மாதிரி. நான் செய்த காஸ்ட்யூம் அவருக்கு மிகவும் பிடித்தது. மிகவும் மகிழ்ச்சியடைந்து என்னை வாழ்த்தினார். இளையராஜா எப்போதும் வேஷ்டி சட்டையில் தான் இருப்பார். அவர் இதுவரை 5 முறை கோட்சூட் போட்டிருக்கிறார்.  இதில் இரண்டு முறை நான் செய்த கோட்சூட் என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஆடை நன்றாக இருக்கிறது என்று சொன்னவரிடம் என்னை அறிமுகப்படுத்தி எனக்கு பாராட்டு வாங்கிக் கொடுத்தார். இதை என்னால் மறக்க முடியாது.  நான் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படத்தில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கிறேன். மேலும் இரண்டு, மூன்று படங்களில் நடிக்கிறேன். இதற்கு முன் கிடாரி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறேன். தற்போது நடிப்பில் அதிகமாக கவனம் செலுத்த இருக்கிறேன்’ என்றார்.
  Next Story
  ×