என் மலர்

  சினிமா

  இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் அறம்
  X

  இரண்டாம் பாகத்திற்கு தயாராகும் அறம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அறம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக வேகமாக தயாராகி வருகிறது. #Aaram
  நயன்தாரா நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ‘அறம்’. கோபி நயினார் இயக்கியிருந்த இதில் நயன்தாரா கலெக்டராக நடித்திருந்தார். மேலும், ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ் – ரமேஷ், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையமைத்திருந்த இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

  கவுன்சிலர் தோண்டிய ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க போராடும் துணிச்சலான கலெக்டராக இந்த படத்தில் நடித்து இருந்தார். கவுன்சிலரை கைது செய்து சிறையில் தள்ளியதால் அரசியல்வாதிகள் கோபத்துக்கு ஆளாவதும் இதனால் பதவியை துறந்து மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் ஈடுபட தயாராவது போன்றும் படத்தை எடுத்து இருந்தனர்.  தற்போது, இதன் 2-ஆம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவே நடிக்கவிருக்கும் இந்த படத்தையும் கோபி நயினாரே இயக்கவுள்ளார், கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. தற்போது படத்தின் முன்னணி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது. 
  Next Story
  ×