என் மலர்

  சினிமா

  பயமில்லை ஆனால், பதட்டம் இருக்கிறது - கார்த்திக் சுப்புராஜ்
  X

  பயமில்லை ஆனால், பதட்டம் இருக்கிறது - கார்த்திக் சுப்புராஜ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஜினி படத்தை இயக்குவது குறித்து மனம் திறந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்க நான் பயப்படவில்லை. என்றாலும் கொஞ்சம் பதட்டம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
  ‘பீட்சா’ படம் மூலம் இயக்குனர் ஆனவர் கார்த்திக் சுப்புராஜ். இப்போது ரஜினி படத்தை இயக்க இருக்கிறார். இதுபற்றி கூறிய அவர்...

  “என் குடும்பத்தை சேர்ந்த யாரும் சினிமா துறையில் இல்லை. என்றாலும், படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. நான் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். எனவே, வேலையைவிடவில்லை. குறும்படங்கள் எடுத்தேன். அதற்கு கிடைத்த பாராட்டு காரணமாக நம்பிக்கை ஏற்பட்டது. நான் இயக்குனர் ஆனேன். இதுவரை 4 படங்கள் எடுத்திருக்கிறேன். சில குறும்படங்கள் எடுத்துள்ளேன். 

  ரஜினி சார் ஒவ்வொரு முறையும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவர். அவருடைய படத்தை தொடங்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ரஜினி சாருடன் பணிபுரிய யாருக்குத்தான் ஆசை இருக்காது?  அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக ரஜினி சார் அறிவித்திருக்கிறார். எனது படவேலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும். ரஜினி சாருடன் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான வி‌ஷயம்.

  ரஜினி சாரை இயக்க நான் பயப்படவில்லை. என்றாலும் கொஞ்சம் பதட்டம் இருக்கிறது. ஆனால், சிறப்பான படத்தை கொடுப்பேன்” என்கிறார்.
  Next Story
  ×