என் மலர்

  சினிமா

  அடுத்த ஆண்டு தனுசுடன் இணைந்து பணியாற்றுவேன் - அனிருத்
  X

  அடுத்த ஆண்டு தனுசுடன் இணைந்து பணியாற்றுவேன் - அனிருத்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீப காலமாகவே நடிகர் தனுஷ் - அனிருத் கூட்டணி பிரிந்திருக்கும் நிலையில், தான் தனுசுடன் அடுத்த ஆண்டு இணைந்து பணியாற்றுவேன் என்று அனிருத் கூறியிருக்கிறார். #Dhanush #Anirudh
  ஐஸ்வர்யா அவரது கணவர் தனுசை வைத்து இயக்கிய ‘3’ படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் அனிருத். தனுஷ்- அனிருத் இணைந்தால் பாடல்கள் பிரபலமாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

  இந்த நிலையில் தனுசும், அனிருத்தும் கூட்டணியில் இருந்து பிரிந்து தனியானார்கள். இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதற்கு இன்னும் பலன் கிடைக்கவில்லை.

  தற்போது சிவகார்த்திகேயனின் படங்களுக்கு அனிருத் முக்கியத்துவம் கொடுத்து இசை அமைத்து வருகிறார். என்றாலும், தனுஷ் படத்துக்கு அனிருத் மீண்டும் இணைய வேண்டும் என்பதில் தனுஷ் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.  இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒய்.ஜி.மகேந்திரன் மகன் திருமண நிகழ்ச்சியில் தனுசும் அனிருத்தும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதைபார்த்த தனுஷ் ரசிகர்கள், இருவரும் படத்திலும் இப்படி சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.

  இதுகுறித்து அனிருத் அளித்த பேட்டியில், “மீண்டும் தனுசுடன் சேர்ந்து பணியாற்றுவேன். இது அடுத்த ஆண்டு நடக்கும்” என்று கூறியுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Dhanush #Anirudh
  Next Story
  ×