என் மலர்

  சினிமா

  சிவகார்த்திகேயன் படத்தில் புலிவெட்டி ஆறுமுகம்
  X

  சிவகார்த்திகேயன் படத்தில் புலிவெட்டி ஆறுமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் கருணாகரன் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. #SK13 #Karunakaran
  `இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிக்குமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையை இயக்க இருக்கிறார். 

  24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளையும், முத்துராஜ் கலை பணிகளையும் மேற்கொள்ள இருக்கின்றனர். 

  இந்நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காமெடி நடிகர் கருணாகரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. `இன்று நேற்று நாளை' படத்தில் புலிவெட்டி ஆறுமுகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த கருணாகரனின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   படஅதிபர்கள் போராட்டம் முடிந்த பிறகு வருகிற மே மாதம் படப்பிடிப்பை துவங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராஜ் இயக்கத்தில் `சீமராஜா' படத்தில் பிசியாகி இருக்கிறார். #SK13 #Karunakaran

  Next Story
  ×