என் மலர்

  சினிமா

  அட்லியின் அடுத்தப் படத்தின் நாயகன் இவரா?
  X

  அட்லியின் அடுத்தப் படத்தின் நாயகன் இவரா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய்யின் ‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் அட்லி இயக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிப்பவர் யார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
  சங்கரிடம் உதவியாளராகப் பணியாற்றிய அட்லி, ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பிறகு விஜய்யை வைத்து ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கினார். இரண்டுமே சூப்பர் ஹிட்டானது.

  இவர் அடுத்ததாக 3 ஹீரோக்களை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் தெலுங்கு நடிகர் பிரபாஸை வைத்து படம் இயக்குவதாக கூறப்பட்டது. 

  இந்நிலையில், தன்னுடைய அடுத்த படம் பற்றி தகவலைத் தெரிவித்திருக்கிறார் அட்லி. சென்னையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அட்லி, ‘அடுத்து தெலுங்கில் படம் இயக்கப் போகிறேன். தெலுங்கின் மிகப்பெரிய ஸ்டார் இந்தப் படத்தில் நடிக்கிறார். அவர் யார் என்ற விவரத்தை விரைவில் வெளியிடுவேன்’ என கூறியிருக்கிறார்.  அட்லி தெலுங்கு படம் இயக்க இருப்பதால், ஏற்கனவே வந்த செய்திப் போல, பிரபாஸை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×