என் மலர்

  சினிமா

  சில்க்குக்காக டெலிவரி பாயாக மாறிய நட்டி
  X

  சில்க்குக்காக டெலிவரி பாயாக மாறிய நட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம், தற்போது புதிய படத்திற்காக ஆன்லைன் டெலிவரி பாயாக மாறியிருக்கிறார்.
  ஒளிப்பதிவில் செய்த மேஜிக் மூலம் தனது எல்லைகளை மொழி கடந்து விரிவாக்கிய நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம், சிறந்த நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனித்துவமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தும், கச்சிதமாக கதாபாத்திரங்களில் பொருந்தியதும் அவரது வெற்றிக்கு காரணம். நட்டி தற்போது ‘சில்க்’ என்ற திரில்லர் கதையோடு வந்திருக்கிறார். 

  இப்படத்தை இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் இயக்குகிறார்கள். இப்படம் குறித்து அவர்கள் கூறும்போது, ‘படத்தில் சில்க் புடவைக்கும், ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்யும் நாயகனுக்கும் ஒரு தொடர்பு உண்டு. மேலும் படத்தின் கதைக்களம் காஞ்சிபுரம் பின்னணியை  கொண்டது.  இந்த கதையை நட்டிக்கு சொன்னவுடன் அவர் இந்த மாதிரி ஒரு கதைக்கு தான் காத்திருந்தேன் என்றார். படத்தின் நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை, சென்சேஷனல் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சத்யா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த அருண்மணி படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். நிச்சயமாக இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்’ என்றார்கள்.
  Next Story
  ×