என் மலர்
சினிமா

தமிழில் வசூல் சாதனை படைத்த சமந்தா படம்
தமிழ் நாட்டில் படத் தயாரிப்பாளர்களின் போராட்டத்தில் படங்கள் ஏதும் ரீலிசாகாத நிலையில், சமந்தாவின் படம் ஒன்று வசூலில் சாதனை படத்துள்ளது. #Samantha
தமிழ்நாட்டில் ஒரு மாதத்துக்கும் மேலாக சினிமா ஸ்டிரைக் தொடர்ந்து வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காலம் தொடங்க இருக்கிறது. வழக்கமாக இந்த கோடை சீசனில் ஏராளமான படங்கள் ரிலீஸ் ஆகும். பெரிய நடிகர்கள் படமும் இந்த விடுமுறையை குறி வைத்தே தியேட்டர்களில் இடம் பிடிக்கும். ஆனால், தற்போது புதிய படங்கள் வராததால் தியேட்டர்களில் கூட்டம் இல்லை. சில ஆங்கில படங்கள், பழைய தமிழ் படங்கள் ஒப்புக்கு ஓட்டப்படுகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2 தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. அதில் ஒன்று ‘பாகி 2’ இன்னொன்று, ராம்சரண் தேஜா-சமந்தா நடித்த ‘ரங்கஸ்தலம்’.
சமந்தா நடித்த இந்த படம் சென்னையில் மட்டும் 3 நாட்களில் ரூ.70 லட்சம் வசூலித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ரூ.1 கோடி வசூலித்து இருக்கிறது. ஈஸ்டர் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக இந்த வசூல் கிடைத்துள்ளது.

ஒரு நேரடி தெலுங்கு படத்துக்கு இது மிகப்பெரிய வசூல் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சமந்தா நடித்த ‘ரங்கஸ்தலம்’ தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திரா- தெலுங்கானாவிலும் சேர்த்து மொத்தம் ரூ.50 கோடி வசூலை குவித்து இருக்கிறது. இதனால் சமந்தா மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
Next Story