என் மலர்

  சினிமா

  இந்தி நடிகையை காதலிக்கும் மஹத்
  X

  இந்தி நடிகையை காதலிக்கும் மஹத்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அஜித்குமாருடன் மங்காத்தா படத்தில் நடித்து பிரபலமான நடிகர் மஹத்துக்கும், இந்தி நடிகை பிராச்சி மிஸ்ராவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Mahat #PrachiMishra
  விஜய்யுடன் ஜில்லா, அஜித்குமாருடன் மங்காத்தா படங்களில் நடித்து பிரபலமானவர் மஹத். பிரியாணி, வடகறி, சென்னை-28 இரண்டாம் பாகம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். மஹத்தும் நடிகை டாப்சியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசு கிசுக்கள் வந்தன. பின்னர் காதலில் முறிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.

  தற்போது இந்தி நடிகை பிராச்சி மிஸ்ராவுக்கும், மஹத்துக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிராச்சி மிஸ்ரா 2012-ல் ‘மிஸ் இந்தியா எர்த்’ பட்டம் வென்றவர். இருவரும் துபாயில் நடந்த நிகழ்ச்சியொன்றில் சந்தித்தனர். அப்போது அறிமுகம் ஏற்பட்டு காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.  பிராச்சி மிஸ்ரா துபாயில் தொழில் அதிபராக இருக்கிறார். அவ்வப்போது இந்தி படங்களிலும் நடித்து வந்தார். மஹத் குடும்பத்தினர் துபாயில் வசிக்கிறார்கள். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மஹத் துபாய் சென்று பிராச்சி மிஸ்ராவை சந்தித்து காதலை வளர்த்து வந்தார். இருவரும் ஆஸ்திரேலியாவில் ஜோடியாக சுற்றும் படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி காதலை உறுதிப்படுத்தி உள்ளது. #Mahat #PrachiMishra

  Next Story
  ×