என் மலர்

  சினிமா

  விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்த நாயகி
  X

  விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்த நாயகி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக நடித்து வரும் படத்தில் அவருடன் ஏற்கனவே 2 படங்களில் நடித்த நாயகி ஒருவர் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. #Junga #VijaySethupathi
  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். 

  பட அதிபர்கள் போராட்டத்தையும் மீறி போர்ச்சுக்கலில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில், ஒரு முக்கிய காட்சியில் மடோனா செபாஸ்டியன் நடித்திருப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மடோனா அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.  மடோனா செபாஸ்டியன் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும், கவண் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக ‘ஜுங்கா’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  ‘ஜுங்கா’ படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்ட நிலையில், ஒரு சில காட்சிகள் மற்றும் ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. #Junga #VijaySethupathi

  Next Story
  ×