என் மலர்

  சினிமா

  விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் அஞ்சலி
  X

  விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் அஞ்சலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குண்டாக இருப்பதாக சமீபத்தில் சில விமர்சனங்கள் வெளியாகி வந்த நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஞ்சலி தனது உடல் எடையை குறைக்க ‘ஜிம்’மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். #Anjali
  ‘அங்காடி தெரு’ படத்தில் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை, சகலகலா வல்லவன், மாப்ள சிங்கம், இறைவி, பலூன் என்று தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் அவருக்கு படங்கள் உள்ளன. தற்போது தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள பேரன்பு படத்தில் மம்முட்டியுடன் நடித்து முடித்துள்ளார்.

  விஜய் ஆண்டனி ஜோடியாக காளி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சசிகுமாருடன் நாடோடிகள்-2 படத்தில் நடித்து வருகிறார். குண்டூர் டாக்கீஸ் என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கவும் அவர் பரிசீலனையில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.  அஞ்சலி உடல் எடை கூடி குண்டாக இருப்பதாக சமீபத்தில் விமர்சனங்கள் கிளம்பின. அவரை வைத்து படம் இயக்கும் டைரக்டர்களும் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை குறைக்கும்படி வற்புறுத்தினர்.

  இதைத்தொடர்ந்து அஞ்சலி ‘ஜிம்’மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார். அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். #Anjali
  Next Story
  ×