என் மலர்

  சினிமா

  பிரபுதேவா படம் தமிழ்நாட்டில் கேள்விக்குறி? ஆனால், அமெரிக்காவில் நிச்சயம்
  X

  பிரபுதேவா படம் தமிழ்நாட்டில் கேள்விக்குறி? ஆனால், அமெரிக்காவில் நிச்சயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்குரி’ திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாவது கேள்விக்குறியாக இருந்தாலும் அமெரிக்காவில் நிச்சயம் வெளியாக இருக்கிறது. #Mercury #PrabhuDeva
  ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் பென் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `மெர்குரி'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, சனத் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், மேயாத மான் இந்துஜா, அனிஷ் பத்மன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாத இந்த படம், ஒரு சைலண்ட் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. பின்னணி இசையின் மூலமே நகரும் இந்த படத்தில் பிரபுதேவா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

  சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதால் ‘மெர்குரி’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்ற குழப்பம் நிலவிவருகிறது.

  இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி சர்வதேசத் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் ‘மெர்குரி’ திரைப்படம் ப்ரீமியர் ஷோவாக திரையிடப்படுகிறது.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்தாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. #Mercury #PrabhuDeva
  Next Story
  ×