என் மலர்

  சினிமா

  தனிக்கலையை என்னைப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள் - சமந்தா
  X

  தனிக்கலையை என்னைப் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள் - சமந்தா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் சமந்தா, தனிக்கலையை என்னைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
  திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தொடர்ந்து முன்னணி இடத்திலேயே இருக்கிறார். சமந்தா விஜய்யுடன் நடித்த ‘மெர்சல்’ படம் வெற்றி பெற்றது. 

  தற்போது விஷாலுடன் இணைந்து நடித்துள்ள ‘இரும்புத்திரை’ விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கில் தயாராகி இருக்கும் ‘சாவித்ரி வாழ்க்கை’ படத்திலும் சமந்தா நடித்திருக்கிறார். இதற்கு தெலுங்கில் ‘மகாநதி’ என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் ‘யூடர்ன்’ ரீமேக்கிலும் நடித்து வருகிறார்.  இவர் விதவிதமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பெண்களை கவர்ந்து வருகிறார். இது பற்றி கூறியுள்ள சமந்தா, ‘எந்த விழாவுக்கு எப்படி உடை அணிந்து செல்ல வேண்டும் என்பது தனிக்கலை. அதை என்னைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Next Story
  ×