என் மலர்

  சினிமா

  சந்தானம் - ராஜேஷ் கூட்டணியில் இணையும் பிரபல நடிகர்
  X

  சந்தானம் - ராஜேஷ் கூட்டணியில் இணையும் பிரபல நடிகர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயக்குநர் எம்.ராஜேஷ், சந்தானத்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்த படம் விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இந்த கூட்டணியில் பிரபல நடிகர் ஒருவர் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. #Santhanam
  தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் கைவசம் 'ஓடி ஓடி உழைக்கணும்', 'மன்னவன் வந்தானடி', தில்லுக்கு துட்டு-2 உள்ளிட்ட படங்கள் உள்ளன. சந்தானம் நடிப்பில் அடுத்ததாக ‘சர்வர் சுந்தரம்’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. 

  அதேநேரத்தில் சந்தானம் அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். ராஜேஷின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வந்த சந்தானம், தற்போது கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.   சில காரணங்களால் அந்நிறுவனம் பின்வாங்கியதால், பிரபுதேவா ஸ்டூடியோஸ் மூலம் பிரபுதேவா தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும், படப்பிடிப்பு வருகிற மே அல்லது ஜூன் மாதம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. #Santhanam

  Next Story
  ×